அள்ளஅள்ளப் பணம், இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர்கள் நீங்கள், உறவுகள் மேம்பட, பங்குச் சந்தை, மனதோடு ஒரு சிட்டிங், எல்லோரும் வல்லவரே, ரசவாதம், நாட்டுக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதிய எழுத்தாளரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான திருமிகு. சோம. வள்ளியப்பன் அவர்கள் எமது மகள் படிக்கும் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரோடு பேசும் அறிய வாய்ப்பு எனக்கும், என் குடும்பத்தாருக்கும் கிடைத்தது.... சந்திப்பின் போது நான் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நூலை பரிசாகக் கொடுத்தேன்.
- கிராபிக்ஸ் பா. கண்ணன்










